இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5%... உலக வங்கி ஆய்வறிக்கையில் தகவல்!

இந்தியா பொருளாதார வளர்ச்சி
இந்தியா பொருளாதார வளர்ச்சி

மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கிறது என உலக வங்கியின் ஆய்வறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த நிதியாண்டிலும், இந்த நிதியாண்டிலும் இந்தியா பொருளாதார வளர்ச்சி அடையும் என உலகவங்கி கடந்த ஆண்டில் கணிப்பு வெளியிட்டிருந்தது. மார்ச் 31 உடன் முடிந்த கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3  விழுக்காடாக இருக்கும் என உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிதியாண்டு மார்ச் 31ல் முடிவடைந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருந்தது என தற்போது உலக வங்கியின் ஆய்வறிக்கையில் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதே நேரத்தில் 2023 ம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4% ஆக இருந்ததாகவும் உலக வங்கி  கூறியுள்ளது. எனினும் 2024-25ம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது. எனினும் இந்த நிதியாண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும் என்றும், உலக வங்கியின் சர்வதேச பொருளாதார ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in