டிச.5-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 5 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

டிச.5-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 5 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக  தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு விடுமுறை அளித்திருந்த வடகிழக்கு பருவமழையானது இன்று முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும், நாளை முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர்களும்  தெரிவித்துள்ளனர். 

'இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம் , டிச. 2,3-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் தமிழக கடலோரம், உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும் டிச. 5-ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும்  வானிலை மையம் கூறியுள்ளது. நாளை இரவு முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் அவ்வபோது கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in