தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் இரவில் உறைபனி இருக்கும்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் இரவில் உறைபனி இருக்கும்!

தமிழகம், புதுச்சேரியில்  இன்று முதல் ஐந்து  நாள்களுக்கு மழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில் , கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  முதல் ஜன.24 வரை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கும்  வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் என்ற  அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செய்த கனமழையால் டெல்டா பகுதியில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிலிருந்து ஒரு சிலரே தப்பி பிழைத்துள்ளனர். அந்த ப யிர்கள் தற்போது அறுவடை பருவத்தில் உள்ளன. ஐந்து நாட்கள் மழையால் அவற்றிற்கும் ஆபத்து வந்து விடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்து இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in