தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு மட்டும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து இடைவிடாமல் கனமழையை கொடுத்து வருகிறது. அதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பிவிட்டன. டெல்டாவில் பெய்திருக்கும் கனமழையின் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்து விட்டன என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம்  இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ``தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 16-ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.  தமிழகம் முழுவதும் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in