நவ.27-ம் தேதி வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

நவ.27-ம் தேதி வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் எதிர்வரும் 27 ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கரையை நெருங்கி வந்ததன் விளைவாக தமிழகத்தின் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளிலும்  கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்துவிட்ட  நிலையில் தற்போது வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் நேற்று கனமழை பதிவாகியது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழையின் விளைவாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.  இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  வலுவிழந்து விட்டாலும் நவ.27-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in