தென் மாவட்டங்களில் இன்று கனமழை: எச்சரிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் இன்று கனமழை: எச்சரிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும்,  வரும் 8-ம் தேதி வரை தமிழகத்தில்  கனமழை நீடிக்கும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.  தொடங்கிய நாள் முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி இரவு பகலாக தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் தொடரும் கனமழையால் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து மூன்று தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை  வரும் 8-ம் தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் அந்தமான் பகுதிகளில் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும்,  இன்று  தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in