தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

மழை நிலவரம்
மழை நிலவரம்தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

இன்று காலை 9:45 மணி வரையிலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக கிழக்கு காற்று மாறுபாட்டின் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்  கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

இன்று காலை 4 மணி நிலவரப்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ராமநாதபுரம்  உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு காலை 6.45 மணி முதல்  அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 9.45 மணி வரையிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in