இந்தியாவில் மாரடைப்பால் 28.1 சதவீதம் பேர் உயிரிழப்பு: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு
மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்புஇந்தியாவில் மாரடைப்பால் 28.1 சதவீதம் பேர் உயிரிழப்பு: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1 சதவீதம் பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மாரடைப்பு மரணங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவர் அளித்துள்ள பதிலில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்திருப்பது குறித்த அதிர்ச்சி தரும்  தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 30 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதும்,  அதனால் மரணம் நிகழ்வதும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கைகளின் படி, 1990-ல் மாரடைப்பால் இறப்போர் 15.2 சதவீதமாக இருந்த நிலையில் 2023-ல் அது  28.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, தினசரி புகைபிடிப்பவர்களில் 32.8 சதவீதம் பேருக்கும், மதுப்பழக்கம் உள்ளவர்களில் 15.9 சதவீதம் பேருக்கும்,  போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3 சதவீதம் பேருக்கும் மாரடைப்பு  ஏற்படுகிறது.

அதேபோல போதுமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாத 98.4 சதவீதம் பேருக்கும் இருதய நோய் ஏற்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு குறித்து மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த தகவல்கள்  பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்பட்டுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in