ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 20 ஆயிரம் பேர் கைது: டிஜிபி தகவல்

செய்தியாளர்களை  சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு
செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 20 ஆயிரம் பேர் கைது: டிஜிபி தகவல்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கஞ்சா ஆபரேஷன் சோதனைகளில் 20 ஆயிரம் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவரும் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது  தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது., "தமிழகத்தில் உள்ள எல்லைப் பகுதிகளான கோவை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லையோர சோதனை சாவடிகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் போலீஸார் சோதனைச் சாவடிகளில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக முழுவதும் போலிஸாரால் நடத்தப்பட்ட 3 கஞ்சா தடுப்பு ஆபரேஷன்களின்போது 20,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2000 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 750 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் போதையில்லா தமிழகத்தை உருவாக்கத்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவரும், சூழலில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாற்று வழியை தேடி போதை மாத்திரைகள் உள்ளிட்ட பழக்கத்தை நாடிச்செல்வதாகவும் தகவல்கள் வருகிறது. அதனை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது" என்று சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in