சபரிமலை சென்ற ஆந்திரா பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 வயது சிறுவன் பலி

சபரிமலை சென்ற ஆந்திரா பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 வயது சிறுவன் பலி

ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு வந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த எட்டுவயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ம் தேதி மாலை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடா மேற்கு கோதாவரி பகுதியில் இருந்து சபரிமலைக்கு ஒரு பேருந்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். பத்தனம் திட்டா அருகே உள்ள லாஹா வஞ்சி விலக்குப்பகுதியில் ஆந்திரப் பக்தர்களின் வாகனம் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் இருந்த 44 பேரும் காயம் அடைந்தனர். இவர்களில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பத்துபேர் பெருநாடு தாலுகா மருத்துவமனையிலும், 7 பேர் பத்தனம் திட்டா அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பேருந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த எட்டு வயது சிறுவன் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஐயப்ப பக்தர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in