சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள்  அறிமுகம்: பயணிகள் மகிழ்ச்சி

புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற சென்னை ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறப்போகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. இதனுடன் ஏசி பெட்டிகளையும் இணைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை அடிப்படையில் ஏசி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. தெற்கு ரயில்வே உடன் சேர்ந்து இது குறித்து ஆலோசனை செய்து வருவதாகத் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை  அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் முதல்முறையாக குளிர்சாதன வசதியுடன் (ஏசி) கூடிய புறநகர் மின்சார ரயில் என்ற பெருமையைச் சென்னை புறநகர் ரயில் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்குச் செல்பவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in