பற்றி எரிந்த மின்சார பைக்: சார்ஜ் போடும் போது நடந்த விபரீதம்

எரிந்த மின்சார பைக்
எரிந்த மின்சார பைக் பற்றி எரிந்த மின்சார பைக்: சார்ஜ் போடும் போது நடந்த விபரீதம்

சார்ஜ் ஏற்றிய போது மின்சார பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவர் சில நாட்களுக்கு முன்பு மின்சார இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்துக்கு நேற்று இரவு சார்ஜ் போட்டு இருக்கிறார் தங்கவேல். அப்போது வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் மின்சார பைக் மட்டுமின்றி வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு 2 லட்சம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக மின்சார வாகனங்கள் சார்ஜ் போடும்போது பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in