பள்ளிச்சிறுமிகளை மடாதிபதி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மருத்துவ அறிக்கையால் அதிர்ச்சி

பள்ளிச்சிறுமிகளை  மடாதிபதி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மருத்துவ அறிக்கையால் அதிர்ச்சி
Updated on
1 min read

கர்நாடகா மடாதிபதி மீதான பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மருத்துவ அறிக்கை குறித்த தகவல் வெளிவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் பிரபலமான முருகமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு(64). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மடத்தில் இருந்த 10-ம் வகுப்பு பயிலும் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமிகள், மைசூரில் உள்ள அரசு சாரா நிறுவனத்தை அணுகியதை அடுத்து ஆக.26-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மடாதிபதி, பல ஆண்டுகளாக தங்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமிகள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சித்ரதுர்கா, மைசூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதன் பின் செப்டம்பர் மாதம் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டு சிறுமிகளிடமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறுமியர்கள் கன்னித் தன்மை இழந்ததற்கான அடையாளம் தென்படவில்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மடாதிபதிக்கு சாதகமாக வந்துள்ளதால் இந்த மேலும் சூடு பிடித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in