3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்: விற்பனைக்கு வருகிறது ஆவின் 'டிலைட்' பசும்பால்!

3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்: விற்பனைக்கு வருகிறது ஆவின் 'டிலைட்' பசும்பால்!

'டிலைட்' என்ற 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பாலை ஆவின் அறிமுகம் செய்துள்ளது.

ஆவின் பால் நிறுவனம் மூன்று வகைகளில் பொதுமக்களுக்கு பால்களை வினியோகம் செய்து வருகிறது. அதன்படி ப்ளூ பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் பாலின் விலை 19.25 ரூபாய்க்கும், பச்சை பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் பாலின் விலை 21.25 ரூபாய்க்கும், ஆரஞ்சு பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் பாலின் விலை 23.25 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது.

அதோடு தீபாவளி நேரங்களில் பல வகையான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. விதவிதமான பொருள்களை விற்பனை செய்து வருவதில் ஆவின் நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் 'டிலைட்' என்ற 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலையை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து இந்தப் பாலை பயன்படுத்தலாம். 500 மி.லி. பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் இந்த பால் தயாரிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in