பலாப்பழ ஐஸ்கிரீம் முதல் வெண்ணெய் முறுக்கு வரை: விற்பனைக்கு வந்துவிட்டது ஆவினின் புதிய 10 பொருட்கள்!

பலாப்பழ ஐஸ்கிரீம் முதல் வெண்ணெய் முறுக்கு வரை: விற்பனைக்கு வந்துவிட்டது ஆவினின் புதிய 10 பொருட்கள்!

பத்து புதிய ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார் தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.

சென்னை நந்தனத்தில் ஆவின் சார்பில் 10 புதிய பொருட்களை பால்வளத் துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் இல்லாமல் இந்த 10 புதிய பொருட்களும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். கறந்த பால், கறந்தபடி தாய்ப்பாலுக்கு நிகராக உருவாக்கப்பட்டு இன்று 10 புதிய பொருட்களை வெளியிட்டிருக்கிறோம்.

பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்டு காஃபி, வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் கேக் மிக்ஸ், பாலாடைக்கட்டி, அடுமனை யோகார்ட், ஆவின் பால் பிஸ்கெட், ஆவின் வெண்ணெய் முறுக்கு, போன்றவை எல்லாம் இன்றைய தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்த புதிய பொருட்கள் மூலம் மாதம் 2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கின்றோம். ஆவின் குடிநீர் குறித்து முதல்வர் அறிவிப்பார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in