4,560 அடி உயரம் கொண்ட இந்த மலை கோயிலுக்கு செல்ல ஆதார் அட்டை முக்கியம்!

4,560 அடி உயரம் கொண்ட இந்த மலை கோயிலுக்கு செல்ல ஆதார் அட்டை முக்கியம்!

4,560 அடி உயரம் கொண்ட பருவதமலையில் உள்ள மல்லிகாஜுனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அரசு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சாமியை தரிசிக்கவும் ஆதார் அட்டை இருந்தால்தான் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதியில் முதன்முதலாக இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. தற்போது தமிழகத்திலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ளது பருவதமலை. 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலையில் மல்லிகாஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் இந்த கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

இந்தநிலையில், மல்லிகாஜுனேஸ்வரர் மலைக்கோயிலுக்கு செல்வோர் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் மேலே செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in