இந்த சலுகைகளை பெற ஆதார் முக்கியம்: தமிழக அரசு திடீர் அறிவிப்பு

இந்த சலுகைகளை பெற ஆதார் முக்கியம்: தமிழக அரசு திடீர் அறிவிப்பு

அரசின் சலுகையை பெற ஆதார் எண் முக்கியம் என்று தமிழக அரசு திடீரென அறிவித்து இருக்கிறது.

அரசின் மானியங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. அந்த தீர்ப்பையும் மீறி மத்திய- மாநில அரசுகள், அரசின் சலுகைகளை பெற ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தி வருகிறது. வங்கி முதல் காஸ் மானியம் வரை ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சலுகைகளுக்கும் ஆதார் எண்களை இணைக்க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனிடையே, இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அரசு கறாராக உத்தரவிட்டுள்ளது. இதனால் பலர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இது 100 யூனிட் இலவசத்துக்கு வேட்டு வைக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியோ, எக்காரணம் கொண்டும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், அரசின் சலுகை பெற ஆதார் எண் முக்கியம் என்று தமிழக அரசு திடீரென அறிவித்திருக்கிறது. இது குறித்து தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண் அளிக்க வேண்டும். அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் எண் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும். கருவூலங்கள் மற்றும் கணக்கு துறை மூலம் பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறை உறுதி செய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in