இனி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்!

இனி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்!

ஆதார் மோசடிகளை தவிர்க்க, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டுமென மத்திய அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு பிறகு அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். இது மத்திய அரசின் தரவு களஞ்சியத்தில் தகவல்களை துல்லியமாக உறுதிப்படுத்துவதுடன், ஆணையம் குறிப்பிடும் காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் ஆதார் அட்டையைப் பெற்று, அதன் பிறகு இதுவரை புதுப்பிக்காத நபர்கள், அத்தகைய ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆவணங்களைப் அளித்து புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in