
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காணச் சென்ற இளைஞர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகளும், அவற்றை அடக்க காளையர்களும் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடமும் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான காளைகள் பங்கேற்றன.
இந்த நிலையில் இந்த போட்டியை காணச்சென்ற புதுவயல் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞரை மாடு முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.