ஆண் நண்பருடன் 3 முறை ஓட்டம் பிடித்த இளம்பெண்: திருந்த நினைத்த போது நடந்த பயங்கரம்

ஆண் நண்பருடன்  3 முறை ஓட்டம் பிடித்த இளம்பெண்: திருந்த நினைத்த போது நடந்த பயங்கரம்

மூன்று முறை கணவன், 2 குழந்தைகளை விட்டு விட்டு ஓடிய மனைவி, திருந்தி வாழ நினைத்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு (36). தனியார் பள்ளிபேருந்து ஓட்டுநரான பாபுவிற்கு அமுதா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில் அமுதாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரனுக்கும் ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திடீரென கணவன், குழந்தைகளை விட்டு விட்டு ஜோதீஸ்வரனுடன் அமுதா சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு, பல இடங்களில் தேடி அலைந்தார். அப்போது புதுச்சேரியில் அமுதா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அமுதாவின் உறவினர்கள் அங்கு சென்று அவரை அழைத்து வந்து பாபுவிடம் சேர்த்தனர். அத்துடன் அமுதாவிற்கு அறிவுரையும் கூறிச் சென்றனர். இதன் பின் சில நாட்களில் ஜோதீஸ்வரன் மீண்டும் அமுதா தலைமறைவானார். மீண்டும் அவரது உறவினர்கள் அமுதாவை சமாதானப்படுத்தி பாவுடன் சேர்த்து வைத்தனர்.

இதன் பின் சில நாட்களுடன் பாவுடன் வாழ்ந்த அமுதா இரண்டு மாதங்களுக்கு முன்பு மூன்றாவது முறையாக ஜோதீஸ்வரனுடன் எஸ்கேப்பானார். இதனால் பாபு அதிர்ச்சியடைந்தார். பாவுவின் நண்பரான சிவப்பிரகாசம், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் கம்பர் தெருவுக்கு சென்ற போது. அமுதா ஜோதீஸ்வரனுடன் குடும்பம் நடத்தியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த தகவைலை பாபுவிடம் கூறியுள்ளார். ஆனால் பாபு, இந்த விஷயத்தை அவர் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்குப் பின் சிவப்பிரகாசத்தை சந்தித்த அமுதா, ஜோதீஸ்வரனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறி அழுதுள்ளார். இதனால் இரக்கமடைந்த சிவப்பிரகாசம், பாவுவிடம் அமுதாவை அழைத்துச் சென்று சமாதானம் பேசியுள்ளார். அப்போது ஜோதீஸ்வரன் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், ஏமாற்றி விட்டதாகவும், செத்துப்போ என்று திட்டுவதாகவும் கூறி அமுதா அழுதார். அத்துடன் மன்னித்து வாழ்க்கைக் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால், 2 முறை திருந்தி வாழ வழி செய்யும் மூன்றாவது முறையாக நீயாகவே சென்று விட்டாய். உன்னோடு எப்படி வாழ்வது என்று பாபு கேட்டு விட்டு அவரது வீட்டிற்குச் சென்று விட்டார்.

இந்நிலையில், பெரியகுப்பம் கம்பர் தெருவில் உள்ள வீட்டில் அமுதா இறந்து கிடப்பதாக சிவப்பிரகாசத்துக்கு நேற்று இரவு தகவல் கிடைத்து. உடனே அவர் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் அமுதா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸில் பாபு புகார் அளித்தார். அதில், ‘எனது மனைவி இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே, விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அமுதாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது அமுதாவுடன் குடும்பம் நடத்திய ஜோதீஸ்வரன் தலைமறைவானது தெரிய வந்தது. அவரைப் பிடித்தால் உண்மை வெளிவரும் என போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in