வரன் பார்த்து வந்த பெற்றோர்; திருமணத்துக்கு விருப்பமில்லாத மகள்: கடைசியில் நடந்த விபரீதம்

விஷம்
விஷம்வரன் பார்த்து வந்த பெற்றோர்; திருமணத்துக்கு விருப்பமில்லாத மகள்: கடைசியில் நடந்த விபரீதம்

திருமணம் செய்ய பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தியதால் அது பிடிக்காமல் இளம்பெண் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயியாக உள்ளார். இவரது மகள் பிரியா(24) கல்லூரியில் படிப்பை முடித்து வீட்டில் இருக்கும் பிரியாவுக்குப் பெற்றோர் திருமணம் செய்ய வரன் பார்த்து வந்தனர். ஆனால் பிரியா தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை எனத் தொடர்ந்து மறுத்துவந்தார். ஆனால் பெற்றோர் விடாப்பிடியாக அவரைத் திருமணம் செய்ய வலியுறுத்தினர்.

இதனால் மனம் உடைந்த பிரியா கடந்த 24-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தார். மாலையில் வீட்டுக்கு வந்த கணேசன் தன் மகள் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு கடந்த நான்கு நாள்களாக சிகிச்சையில் இருந்த பிரியா நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார். அவரது உடல் தென்காசி அரசு மருத்துவமனையில் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in