'என் மனைவியோடு சாட்டிங்கா செய்கிறாய்?’: டிஎஸ்பி அலுவலகம் அருகே நண்பனை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபரால் பரபரப்பு

'என் மனைவியோடு சாட்டிங்கா செய்கிறாய்?’: டிஎஸ்பி அலுவலகம் அருகே நண்பனை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபரால் பரபரப்பு

தன் மனைவியுடன் சாட்டிங் செய்வதை நண்பரை கத்தியால் சரமாரியாக குத்திய வாலிபரால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(29). இவர் சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு குழந்தைகள் உள்ளன.

இதே பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணியாற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சத்தியநாதன்( 28) என்பவர் வசித்து வந்தார். அப்போது கார்த்திக்கிற்கும், அவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால் கார்த்திக் வீட்டிற்கு சத்தியநாதன் அடிக்கடி வந்து போய் உள்ளார்.

அப்போது கார்த்திக் மனைவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொலைபேசியில் பேசுவதும், குறுஞ்செய்திகளை அனுப்புவதையும் இவரும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். இதையறிந்த கார்த்திக் இருவரையும் பலமுறை கண்டித்தும் அவர்கள் பழக்கம் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் சத்தியநாதனை கார்த்திக் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது சத்தியநாதன் ஓட்டிய டூவீலரின் பின்புறம் கார்த்திக் அமர்ந்திருந்தார். பெர்ன்ஹில்சாலை பகுதியில் போகும் போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்தியநாதனை கார்த்திக் சரமாரியாக குத்தினார். இதனால் நிலைதடுமாறி டூவீலரில் இருந்து சத்தியநாதன் கீழே விழுந்தார். ஆனால், அவரை விடாமல் துரத்தி கார்த்திக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சத்தியநாதன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்கை கைது செய்தனர். படுகாயமடைந்த சத்தியநாதனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பெர்ன்ஹில் சாலை பகுதியில் தான் கொடைக்கானல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in