மின்விசிறியில் மகன், பீரோ கைப்பிடியில் தாய், கதவு கொக்கியில் பேரன்: பெண்ணின் நடத்தையால் தூக்கில் தொங்கிய சோகம்

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது தாய் மற்றும் தனது மகன் ஆகியோருடன்  இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவானைக்காவல் அய்யன்வெட்டித் தெருவில்  வசித்து வந்தவர் லட்சுமணன் மகன் கார்த்திகேயன்(35). இவர்  தனது தாய்  வசந்தா ( 68), மனைவி வசந்தபிரியா (30), மகன் சாமிநாதன் ( 8) ஆகியோருடன் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.  

கடந்த, 5 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றிய கார்த்திக்கேயன், கடந்த, மூன்று நாட்களுக்கு முன்புதான் நாடு திரும்பியுள்ளார். மனைவி மீது அதீத அன்பு வைத்திருந்த  கார்த்திகேயன் அந்த அன்பு காரணமாக மனைவியை  தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டிருப்பாராம். வெளிநாட்டில் வேலை செய்தாலும், மனைவி என்ன செய்கிறார்? என்பதை கண்காணித்துக் கொண்டிருப்பாராம்.

இதனால் வசந்த பிரியா தனது கணவன் மீது கோபமாக இருந்துள்ளார். இதன் காரணமாக, ஊருக்கு திரும்பிய பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கார்த்திகேயன், வசந்தபிரியாவை வேலைக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். மதியத்திற்கு பிறகு வசந்தபிரியா போனில் அழைத்தும் யாரும் எடுக்கவில்லை. 

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் சொல்லி இருக்கிறார். அவர்களும், மாலை முதல் பூட்டப்பட்ட கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கவில்லை என்று வசந்தபிரியாவிடம் சொல்லி இருக்கிறார்கள். அத்துடன் வீட்டின் கதவை வெகு நேரம் தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை,  கதவும் திறக்கவில்லை. 

போனில் அழைத்தும், கதவைத் தட்டியும் எவ்வித பதிலும் இல்லாததால் பதற்றமடைந்த வசந்தபிரியா  ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதனையடுத்து அங்கு வந்த  ஶ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதிதா தலைமையிலான போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு இரண்டு கைகளின் மணிக்கட்டை அறுத்த நிலையில் கார்த்திக்கேயன் மின்விசிறியில்  தூக்கில்  தொங்கிக் கொண்டிருந்தார்.  பீரோ கைப்பிடியில் வசந்தாவும், கதவின் பின்புற கொக்கியில் சாமிநாதனும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

மூவரின் உடலையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தாய் வசந்தாவையும், மகன் சாமிநாதனையும் தூக்கிலிட்டு கொலைச் செய்துவிட்டு, அதன்பின்னர் கார்த்திக்கேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கார்த்திக்கேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் 'எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு பிறகு எனது தாயும், மகனும் கஷ்டப்படுவார்கள் என்பதால்  இந்த முடிவை எடுத்துள்ளேன். மனைவி படித்திருப்பதால் அவளது வாழ்க்கையை அவர் பார்த்துக் கொள்வார்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், பேரன் என மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in