
வள்ளியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த மகள் அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தந்தையின் கண்முன்னே மகள் உயிரிழந்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது இளைய மகள் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக தனது மகள் மகாராசி உடன் ஜெயபால் தனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் சென்றுக் கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி அருகே ஜெயபால் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து மின்னல் வேகத்தில் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த மகாராசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்தார் ஜெயபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையின் கண்முன்னே மகள் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.