செல்போன் சார்ஜர் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: மனைவி, மகன் கண் முன் உயிரிழந்த தொழிலாளி

செல்போன் சார்ஜர் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: மனைவி, மகன் கண் முன் உயிரிழந்த தொழிலாளி

கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜூன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு யஸ்வந்த், திவின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று திவினை தனது தாய் வீட்டில் அர்ஜூன் விட்டு வந்தார்.

வீட்டில் கஸ்தூரி, யஸ்வந்த் உறங்கியுள்ளனர். வீட்டின் அருகே இருந்த செட்டில் அர்ஜூன் உறங்கியுள்ளார். அப்போது அவர் செல்போனை சார்ஜ் போட்டு இருந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் திடீரென செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ குடிசையில் பற்றியது. இதில் வீட்டை வெளியேற முடியாததால் அர்ஜூன் அலறியுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அவரது மனைவி கஸ்தூரி மற்றும் பக்கத்து வீட்டினர் ஓடிவருவதற்குள் தென்னை ஓலையால் வேயப்பட்ட அந்த குடிசை முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மனைவி, மகன் கண் முன் அர்ஜூன் உயிரிழந்தார். இந்தவிபத்து குறித்து சிறுவலூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் அர்ஜூன் உயிரிழந்தது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in