அகதிகள் முகாமில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்: கொலையா? என சந்தேகம்

அகதிகள் முகாமில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்: கொலையா? என சந்தேகம்

கன்னியாகுமரி மாவட்டம், ஞாறன்விளையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில், அகதிகள் முகாமைச் சேர்ந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஞாறன்விளை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் இலங்கையில் இருந்து வந்த தர்ம குணசிங்கம் (59) என்பவர், தன் மனைவி மேரி அஜந்தாவுடன் வசித்து வந்தார்.

இன்று அதிகாலையில் தர்ம குணசிங்கம் முகாம் வளாகத்தில் இருக்கும் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும், மார்த்தாண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தர்ம குணசிங்கம் குடும்பத்தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து அவரை மரத்தில் தொங்கவிட்டனரா? என்றெல்லாம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தர்ம குணசிங்கத்தின் சடலத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இலங்கை அகதிகள் முகாமில் தொழிலாளி மர்மச்சாவு அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in