
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தூத்துக்குடி தெர்மல் நகர் கோவில் பிள்ளை நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த்(33), இவர் தெர்மல் நகர் பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். மெக்கானிக்கல் பிரிவில் கடந்த 11 ஆண்டுகளாக இவர் இங்கே வேலைசெய்து வந்தார். இவருக்கு தினமும் இரவு நேர டியூட்டி ஆகும், வழக்கம் போல் இவர் நேற்று இரவு பணிக்கு வந்தார். அங்குள்ள உடைமாற்றும் அறைக்குச் சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே, அவர் பணியிடத்திற்கு திரும்பவில்லை.
சக ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பிரசாந்த், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெர்மல் நகர் போலீஸார், பிரசாந்த் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.