
துப்பாக்கியை காட்டி பெண்ணிடம் நகையையும், சிறுவனிடம் செல்போனை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்து. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பதறவைத்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தின் லோனி பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து பெண்ணை மிரட்டி நகையை கழற்ற சொல்கிறார். உயிருக்குப் பயந்து அந்தப் பெண் நகையை கழற்றி கொடுக்கிறார். அப்போது, அருகில் இருந்த சிறுவனின் செல்போனை பறித்துச் செல்கிறார் மர்ம நபர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பதறவைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளி அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று லோனி டிஎஸ்பி ரஜ்னீஷ் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.