கணவன் கண்முன்னே மனைவியை மிதித்துக்கொன்ற யானை: வேலைக்கு சென்றபோது காட்டில் பயங்கரம்

கணவன் கண்முன்னே மனைவியை மிதித்துக்கொன்ற யானை: வேலைக்கு சென்றபோது காட்டில் பயங்கரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தில் பால்வெட்டும் தொழிலாளி, பணிக்குச் சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசுக்கு சொந்தமான ஏராளமான ரப்பர் மரங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ரப்பர் பால் வடிப்புத் தொழிலாளர்களும் வேலைசெய்து வருகின்றனர். இதில் சிற்றாறு ரப்பர் கழகக் குடியிருப்பில் வசிப்பவர் மோகன் தாஸ். இவரது மனைவி ஞானவதி(55) மோகன் தாஸூம் பால்வெட்டும் தொழிலாளியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஞானவதி இப்போதும் பால்வெட்டும் தொழிலாளியாக இருந்தார்.

இன்று காலையில் சிற்றாறு கோட்டத்தின், களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் மரங்களில் பால் வெட்டும் பணிக்கு ஞானவதி சென்றார். அவரது கணவர் மோகன் தாஸூம் உடன் சென்று இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருக்கும்போதே வழியில் காட்டு யானை ஒன்று நின்றுகொண்டு இருந்தது. அந்த யானையைப் பார்த்ததும் தம்பதிகள் இருவரும் மேடான பகுதி ஒன்றில் ஏறி மாற்றுப்பாதையில் செல்ல முயன்றனர். அப்போது மோகன் தாஸ் ஏறிவிட்டார். ஆனால் ஞானவதி ஏறுவதற்குள் ஓடிவந்த யானை அவரைத் தாக்கியது. மேலும் தும்பிக்கையால் தூக்கி அடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஞானவதி உயிர் இழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, அரசு ரப்பர் கழக அதிகாரிகளும் சம்பவ இடம் விரைந்துள்ளனர்.

இதனிடையே அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள், ரப்பர் கழகத்திற்கு சொந்தமான இடங்களில் முட்புதர்கள் போல் காடுகள் வளர்ந்து நிற்கிறது. இதனால் தூரத்தில் யானை நின்றாலும் தெரிவது இல்லை. அந்த முட்புதர்கள் அகற்றப்பட வேண்டும். யானைகளை அகலி வெட்டி பிடித்து அடர் வனப்பகுதியில் விடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in