`உன் அன்புதான் எனக்கு வேணும்'- ஆண் நண்பருக்காக உயிரைவிடத் துணிந்த பெண்: சமரசம் செய்த போலீஸ்

`உன் அன்புதான் எனக்கு வேணும்'- ஆண் நண்பருக்காக உயிரைவிடத் துணிந்த பெண்: சமரசம் செய்த போலீஸ்

ஆண் நண்பருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி திருமணமான பெண் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தருமபுரி மாவட்டம், பி.குறிஞ்சிப்பட்டி சேர்ந்தவர் சுமதி. இவர் கோவையில் தங்கியிருந்து சூலூர் பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடன் கோபிநாத்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பது இவருடன் பணியாற்றிய வந்து இருக்கிறார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தவறான உறவாக மாறி இருக்கிறது. இருவரும் அடிக்கடி தலைமையில் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் அன்று இருவரும் சொந்த ஊர் வந்துள்ளனர். அப்போது சுப்பிரமணியன் வீட்டில் வைத்து இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. போதை தலைக்கேறியதும் சுமதி, தன்னிடம் வாங்கிய நகையை திருப்பி தரும்படியும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், சுமதியை வீட்டிலிருந்து துரத்தி இருக்கிறார். இந்த நிலையில் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறிய சுமதி, தனது ஆண் நண்பரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி தற்கொலைக்கு முயன்றார். இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் சுமதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை டவரில் இருந்து கீழே இறக்கினர். பின்னர், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது காவல்துறையினர் இருவரையும் பேச அனுமதித்தனர். இதையடுத்து சுமதியை நோக்கி, உனக்கு என்ன வேணும் என்று சுப்பிரமணியன் கேட்க, அப்போது, உன் அன்பு தான் எனக்கு வேண்டும் என்றும் சுமதி கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, சுமதியை திட்டினார். காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தினர். அப்போது சுப்பிமணி, எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறது சார் என்று சொன்னவுடன் சுமதியும், எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறது என்று சொன்ன உடன் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in