பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர்; ஓடும் ரயிலிலிருந்து வீசப்பட்ட பெண்: மகன் கண்முன்னே நடந்த கொடூரம்

பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர்; ஓடும் ரயிலிலிருந்து வீசப்பட்ட பெண்: மகன் கண்முன்னே நடந்த கொடூரம்

ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவரால் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தடுத்த பெண் ரயிலில் இருந்து வீச்சப்பட்டுள்ளார். மகன் கண்முன்னே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஹரியாணா மாநிலம், ரோஹ்தக் நகரத்தில் இருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொஹானாவுக்கு தனது 9 வயது மகனுடன் 30 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு ரயிலில் பயணம் மேற்கொண்டார். அந்தப் பெட்டியில் அவர்களை சேர்த்து 3 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். அப்போது, அந்தப் பெண்ணை மர்ம நபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்தப் பெண் தடுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளார். அந்த நபரும் ரயிலில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இரவில் பெண்ணின் உடலை காவல்துறையினரும், உறவினர்களும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் புதர் மண்டியிருந்ததால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு பகலில் பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தான் இறங்க வேண்டிய இடத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவு இருந்தபோது அந்தப் பெண் தனது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கணவர் தனது மனைவியின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் பெண்ணை ரயில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சந்தீப் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in