மகள் கண்எதிரே துள்ளத்துடிக்க உயிரிழந்த தாய்: டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது நடந்த பயங்கரம்

மகள் கண்எதிரே துள்ளத்துடிக்க உயிரிழந்த தாய்: டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது நடந்த பயங்கரம்

கள்ளக்குறிச்சி அருகே மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் டிராக்டர் டயரில் சிக்கி மகளின் கண்ணெதிரே நசுங்கி பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சின்னசேலம் ஒன்றியம் விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை என்பவர் அவரது மகளுடன் இன்று மதியம்  இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார். கனியாமூர் கிராமம் கும்பக்கரை பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால்  கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு சென்ற  டிராக்டரை  முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது.   கீழே விழுந்த  அஞ்சலை மீது டிராக்டர் டயர் ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகள் காயமின்றி உயிர் தப்பினார்.  மகள் கண் எதிரே தாய் டிராக்டரில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த  சின்னசேலம் போலீஸார் அஞ்சலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in