நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்த முதியவர்: ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்த்த பெண் இன்ஸ்பெக்டர்

நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்த முதியவர்: ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்த்த பெண் இன்ஸ்பெக்டர்

சென்னையில் சாலையில் நடந்து சென்ற முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி அளித்து ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் அனுமதித்த பெண் ஆய்வாளரின் செயலுக்குப் பாராட்டுக் குவிந்து வருகிறது.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதிக்குட்பட்டது சீனிவாசன் நகர். இந்த பகுதி சாலையில் நேற்று இரவு நடந்து சென்ற முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது- இதனால் அவர் சுருண்டு விழுந்தார். இதைப்பார்த் து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக, முதியவருககு முதலுதவி அளித்து ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது, இதனால் அருகிலிருந்த ஆட்டோவில் முதியவரை ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சேர்த்துள்ளார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

இதனால் உரிய நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் முதியவர் உயிர் பிழைத்தார். பணியிலிருந்த நேரத்தில் மனிதாபிமானத்துடன் முதியவருக்கு மருத்துவ உதவி செய்த ராஜேஸ்வரி, கடந்த நவம்பர் மாதம் பெய்த பருவ மழையின் போது, சாலையின் ஓரம் மழை நீர் வடிகாலில் கிடந்த இளைஞரைத் தன் தோளில் சுமந்து மருத்துவமனை வரை தூக்கிச் சென்றவராவார். அவரை நேரடியாக அழைத்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in