வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் 3 ஆண்டுக்குப் பின் சிக்கிய பெண்: 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

வாட்ஸ் அப்  ஸ்டேட்டஸால் 3 ஆண்டுக்குப் பின்  சிக்கிய பெண்:   4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

திருடிய நகையை ஸ்டேட்டஸில் வைத்ததால் பெண் ஒருவர் வசமாக போலீசில் சிக்கிய சம்பவம் தென்காசியில் நிகழ்ந்துள்ளது.

தென்காசி, சிவந்தி நகரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ல் 16 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் எவ்வளவோ முயற்சித்தும் துப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், பங்கஜவள்ளி தனது வீட்டில் வேலை பார்த்த மாப்ளரெட்டியார்பட்டியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மனைவி ஈஸ்வரி வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் பங்கஜ வள்ளியின் வீட்டில் திருடிய நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு ஈஸ்வரி போஸ் கொடுத்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு பங்கஜவள்ளி தகவல் அளித்தார். ஈஸ்வரியை போலீஸார் கைது செய்து சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல நகையைத் திருடி விட்டு 3 ஆண்டுகள் கழித்து அதை ஸ்டேட்டஸில் வைத்து பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in