உங்க கணவரை என்னோடு சேர்த்து வையுங்க; கதறி அழுத முன்னாள் காதலி: அதிரடி முடிவெடுத்த மனைவி

உங்க கணவரை என்னோடு சேர்த்து வையுங்க; கதறி அழுத முன்னாள் காதலி: அதிரடி முடிவெடுத்த மனைவி

தனது கணவனை அவரின் முன்னாள் காதலிக்கு மனைவியே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக் மூலம் பிரபலமான அவர், சில ஆண்டுகளுக்கு முன் கடப்பாவைச் சேர்ந்த விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் இருவரும் டிக் டாக் வீடியோக்களில் நடித்து பிரபலமாகினர்.

இந்த நிலையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் விமலாவை சந்தித்துள்ளார். அப்போது கல்யாணை ஏற்கெனவே காதலித்து வந்ததாகவும், இருவரும் சேர்ந்து டிக்டாக் வீடியோக்கள் செய்து வெளியிட்டதாகவும், சில காரணங்களால் தங்கள் காதல் முறிந்து விட்டதாக விமலாவிடம் கூறியுள்ளார். அத்துடன் தங்களைச் சேர்த்து வைக்குமாறு விமலாவிடம் நித்யாஸ்ரீ கெஞ்சியுள்ளார்.

இதுகுறித்து தனது கணவர் கல்யாணிடம் விமலா கூறியுள்ளார். அதனால் நித்யாஸ்ரீயுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து திருப்பதியில் கல்யாண்- நித்யாஸ்ரீ இருவருக்கும் விமலா முன் நின்று நேற்று திருமணம் செய்து வைத்தார். தனது கணவனுக்கு அவரது முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்து அவர்களுடன் விமலா எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in