கனமழையால் துண்டிக்கப்பட்ட கிராமம்; தேர்வெழுத ஆற்றைக்கடந்த இளம்பெண்: வைரலாகும் வீடியோ

கனமழையால் துண்டிக்கப்பட்ட கிராமம்; தேர்வெழுத ஆற்றைக்கடந்த இளம்பெண்: வைரலாகும் வீடியோ

ஆந்திராவில் கனமழையால் கிராமம் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரைப் பணயம் வைத்து இளம்பெண் நீந்திச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மாரிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி(21). அவர் விசாகப்பட்டினத்தில் இன்று தேர்வு எழுத வேண்டியிருந்தது. கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவரது கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரைககு அவரை அழைத்துச் செல்ல படகுகள் இல்லை. ஆனால், அவருக்கு நீச்சல் தெரியாது.

ஆனால், தேர்வு எழுத வேண்டுமானால் ஆற்றைக் கடக்க வேண்டும். ஆனால், ஆற்றைக் கடந்து தேர்வெழுத துணிந்து தண்ணீரில் கலாவதி இறங்கினார். அவரின் இந்த நடவடிக்கையைக் கண்ட அவரது சகோதரரும், அவரது நண்பரும் கலாவதியை தோளில் தாங்கியவாறு நீந்தி மறுகரைக்குச் சென்றார். உயிரைப் பற்றி கவலைப்படாமல் தேர்வெழுத இளம்பெண் எடுத்த இந்த முயற்சி இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in