`நான் யாருக்காக சம்பாதிக்கணும்'- திருமணமாகாத விரக்தியில் 37 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு `நான் யாருக்காக சம்பாதிக்கணும்'- திருமணமாகாத விரக்தியில் 37 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு

தூத்துக்குடியில் தனக்கு 37 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லையே என விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி கே.டி.சி நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(37). இவருக்கு நீண்டகாலமாக பெண் தேடியும் திருமணம் ஆகவில்லை. இதனால் ராமகிருஷ்ணன் கடுமையான மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் மன விரக்தியில் தான் வேலைசெய்து வந்த தனியார் நிறுவனத்திற்கும் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார். உறவினர்கள் ஆலோசனை சொன்னபோதும், திருமணம் ஆகாத நான் யாருக்காக சம்பாதிக்கும் தேவை உள்ளது? எனவும் மனம் நொடிந்துபோய் புலம்பி வந்தார்.

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் சரிவர வேலைக்குச் செல்லாததால் அந்த தனியார் நிறுவனம் அவரை வேலையை விட்டும் நீக்கியது. இதனால் மனம் விரக்தி அடைந்த ராமகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ராமகிருஷ்ணனின் தாய் இதுகுறித்துக் கொடுத்தத் தகவலின்பேரில் சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in