ஊருக்குள் புகுந்து மாட்டை வேட்டையாடி அருகிலேயே காத்திருந்த புலி: அச்சத்தில் நீலகிரி மக்கள்

ஊருக்குள் புகுந்து மாட்டை வேட்டையாடி அருகிலேயே காத்திருந்த புலி: அச்சத்தில் நீலகிரி மக்கள்

நீலகிரியில் ஊருக்குள் புகுந்த புலி ஒன்று மாட்டை வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு அருகிலேயே காத்திருந்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரியில் அண்மை காலமாக யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் ஊரில் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. வீட்டிற்குள் புகுந்து யானைகள் அங்கிருக்கும் பொருள்களை துவம்சம் செய்து செல்கிறது. அண்மையில் கரடி ஒன்று கல்யாண மண்டபத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சாப்பிட்டுவிட்டு சென்றது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பொது மக்களை பதற வைத்தது. வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரியில் ஓசிஎஸ் காலனி பகுதியில் இன்று அதிகாலை புலி ஒன்று ஊருக்குள் புகுந்து மாட்டை வேட்டையாடி அதன் அருகிலேயே அமர்ந்திருந்த காட்சியை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் புலியை அங்கிருந்து விரட்டி மாட்டை மீட்டனர். பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த புலி ஒன்று கால்நடையை வேட்டையாடிய சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in