பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; தரைமட்டமான அறைகள்: உடல் சிதறி 5 பேர் பலி

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; தரைமட்டமான அறைகள்: உடல் சிதறி 5 பேர் பலி

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமம் உள்ளது. இங்கு தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

இங்கு பட்டாசு தயாரிக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து மூன்று கட்டிடங்களும் தரைமட்டமாகின.

இந்த வெடி விபத்தில் அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா ஆகிய தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in