மாற்றுத்திறனாளியை சபரிமலை சன்னிதானம் வரை முதுகில் சுமந்து சென்ற கோயில் காவலர்: வைரலாகும் புகைப்படம்

மாற்றுத்திறனாளியை சபரிமலை சன்னிதானம் வரை முதுகில் சுமந்து சென்ற கோயில் காவலர்: வைரலாகும் புகைப்படம்

சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடைதிறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோயிலில் பாதுகாவலராக பணி செய்வர், மாற்றுத்திறனாளி ஒருவரை சன்னிதானம்வரை தன் முதுகிலேயே தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோயில் நடையானது கடந்த 16-ம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இணைய வழி முன்பதிவும் இம்முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலை ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் செல்லும்வகையில் டோலி வசதி உள்ளது. ஆனால் அதற்கு 6000 ரூபாய் வரை கட்டணம் உள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த அல்லிராஜ் என்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் மிகவும் சிரமப்பட்டு மலையேறிக் கொண்டிருந்தார். டோலியில் செல்லும் அளவுக்கு அவரிடம் பொருளாதார பலமும் இல்லை. இந்நிலையில் கோயில் பாதுகாவலர் குமார் இதைப் பார்த்துவிட்டு தன் முதுகில் அவரை சுமந்து கொண்டு நீலிமலை, கழுதை ஏற்றம் என மிகவும் கஷ்டமானப் பகுதிகளை எல்லாம் கடந்து சந்நிதானத்தில் கொண்டுபோய் விட்டார். இதை ஐயப்ப பக்தர்கள் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட அது வைரல் ஆகிவருகிறது. கோயில் பாதுகாவலராக பணிசெய்யும் குமார், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in