காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(30) இவர், அவர் அவரது ஊருக்கு அருகில் உள்ள மாந்தோப்புப் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடச் சென்றார். அவர் பன்றி வேட்டைக்காக திருட்டுத் தனமாக மின்வேலியும் அமைத்துள்ளார். அந்த மின்வேலிக்கு மின்சாரம் கொடுக்கும் வகையில் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் தெரிந்ததும் சாம்பல்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித் குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பன்றி வேட்டைக்கு மின்சாரத்தை கொக்கி போட்ட வாலிபர் தானே மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் உயிரிழந்த ரஞ்சித்குமார் மீது வனத்துறை சட்டத்தின் கீழும், மின்சாரத்தை திருடியதாகவும் அவர் மேல் வழக்குப்பதிவாகும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in