கோயிலில் அமர்ந்து ஆபாசபடம் பார்த்த வாலிபர்; சிசிடிவி கேமராவில் காட்டி சில்மிஷம்: பதறிய குருக்கள்

கோயிலில் அமர்ந்து ஆபாசபடம் பார்த்த வாலிபர்; சிசிடிவி கேமராவில் காட்டி சில்மிஷம்: பதறிய குருக்கள்

கோயிலில் ஆபாச படம் பார்த்ததுடன் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் ஆபாசபடத்தை காண்பித்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கோயிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் கோயிலி்ல் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா முன்பு தான் செல்போனில் பார்த்த ஆபாசபடத்தை காண்பித்து சில்மிஷம் செய்துள்ளார்.

சிசிடிவியில் ஆபாச படம் தெரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் குருக்கள் உடனே வெளியே ஓடிவந்து பார்ப்பதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ந்து போன கோயில் குருக்கள் பிரசாந் இது குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் கோயிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட அடையாளம் தெரியாத இளைஞர் மீது மத உணர்வை புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து தப்பியோடிய வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர். கோயிலில் வாலிபர் ஒருவர் ஆபாசபடம் பார்த்த சம்பவம் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in