இரண்டரை வயது குழந்தையை வன்கொடுமை செய்ய முயற்சி: கொடூர வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை

இரண்டரை வயது குழந்தையை வன்கொடுமை செய்ய முயற்சி: கொடூர வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை

சென்னையில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலையோரத்தில் தங்கி குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் அருண். அவருடன் சாலையிலேயே தங்கியிருந்தவரின் இரண்டரை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய அருண் முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் அனைத்து மகளிர் போலீஸார் அருண் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அருண் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் இழ்ப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in