பஸ்சுக்காக காத்திருந்த 92 வயது மூதாட்டி பலாத்காரம்: டூவீலரில் லிஃப்ட் கொடுத்த இளைஞர் வெறிச்செயல்

பஸ்சுக்காக காத்திருந்த 92 வயது மூதாட்டி பலாத்காரம்: டூவீலரில் லிஃப்ட் கொடுத்த இளைஞர் வெறிச்செயல்

இரவில் பேருந்துக்காக காத்திருந்த 92 வயது மூதாட்டிக்கு லிஃப்ட் கொடுப்பது டூவீலரில் அழைத்துச் சென்று புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி. இவரது உறவினர்கள் மதுவா கிராமத்தில் உள்ளனர். இவர்களைப் பார்ப்பதற்காக ஜபல்பூரில் இருந்து ஷாடோலுக்கு அந்த மூதாட்டி ரயிலில் வந்துள்ளார். அங்கிருந்து மதுவா கிராமத்திற்குப் போவதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த வாலிபர், மதுவா கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக மூதாட்டியை அழைத்துள்ளார். இதை நம்பி அவரது வாகனத்தில் கிராமத்திற்கு மூதாட்டி சென்றுள்ளார். ஊர் எல்லையைத் தாண்டியதும் அந்த மூதாட்டியை புதருக்குள் இழுத்துச் சென்று அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து மதுவா கிராமத்திற்கு வந்த மூதாட்டி, தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து மதுவா போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரைத் தேடி வருகின்றனர். கடந்த வாரம் இதே கிராமத்தில் உடல்நலக்குறைவால் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in