காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர்: நடுரோட்டில் நடந்த பயங்கரம்

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர்:  நடுரோட்டில் நடந்த பயங்கரம்

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் இன்று பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சூரியநாராயணா. அவர் அதே பகுதியை சேர்ந்த தேவகி என்ற பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்தார். ஆனால், அந்த பெண் வெங்கட சூரியநாராயணாவை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனாலும் தன்னைக்காதலிக்க வேண்டும் என்று தேவகியை அவர் தொட்ர்ந்து தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும், அவரது காதலை தேவகி ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில், கந்த்ரேகுலா குர்ராடா பகுதியில் இன்று பதுங்கியிருந்த வெங்கட சூரியநாராயணா அவ்வழியாக டூவீலரில் வந்த தேவகியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

நடுரோட்டில் வைத்து தேவகியை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதனால் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இந்த சம்பத்தைக் கண்ட பொதுக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வெங்கட சூரியநாராயணாவைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்., தேவகியை மீட்டு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே தேவகி இறந்து விட்டதாக கூறினர். இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒருதலைக்காதலால் இளம்பெண்ணை வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in