`என் காதலை ஏற்றுக்கொண்டே ஆகணும்'- காதலர் தினத்தில் மறுத்த மாணவியின் கன்னத்தில் அறைந்த வாலிபர்

கைது - சித்தரிப்பு படம்
கைது - சித்தரிப்பு படம்காதலிக்க மறுத்த மாணவிக்கு கன்னத்தில் பளார்விட்ட வாலிபர் கைது

காதலிக்க மறுத்த மாணவியை பேருந்து நிலையத்தில் வைத்து வாலிபர் கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இவர் தினமும் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் கல்லூரிக்குச் சென்றுவருவார். குளச்சல் பேருந்து நிலையத்தில் பரிசுப் பொருள்கள் விற்கும் கடை வைத்திருந்த மிடாலத்தைச் சேர்ந்த ரிஷபன்(30) என்ற வாலிபர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

நேற்று மாலை வழக்கம் போல் மாணவி கல்லூரி முடிந்து குளச்சல் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது ரிஷபன், தன்னை காதலிக்கும்படி மாணவியிடம் வற்புறுத்தினார். மேலும் இன்று காதலர் தினம், என் காதலை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் எனவும் சொன்னார். மாணவி மறுக்கவே, என்னைக் காதலிக்க முடியாதா? எனக் கேட்டு அவரது கன்னத்தில் பளார் என அறைந்தார். மேலும், மாணவியின் ஆடையையும் கிழித்தார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸார் ரிஷபனை இன்று கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in