நண்பனுக்காக கானா பாடுவதில் தகராறு; ஆவேசத்தில் வாலிபர் படுகொலை: இரங்கல் நிகழ்ச்சியில் பயங்கரம்

கொல்லப்பட்ட உமர் பாஷா
கொல்லப்பட்ட உமர் பாஷாநண்பனுக்காக கானா பாடுவதில் தகராறு; ஆவேசத்தில் வாலிபர் படுகொலை: இரங்கல் நிகழ்ச்சியில் பயங்கரம்
Updated on
1 min read

சென்னையில் இரங்கல் நிகழ்ச்சியில் கானா பாடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை நெருப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் உமர் பாஷா( 19). லேத் பட்டறையில் பணியாற்றி வந்த இவர் மீது செல்போன் வழிப்பறி வழக்கு ஒன்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி உமர் பாஷாவின் நண்பரான சந்தோஷ் (20 ) இறந்ததையொட்டி சைதாப்பேட்டை செட்டி தோட்டத்தில் அதற்கான காரியம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த கானா நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் தரப்புக்கும், உமர்பாஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தினேஷ் தரப்பினர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமர் பாஷாவின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த உமரை அருகிலிருந்த நண்பர்கள் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உமர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தினேஷ், அருண், சக்திவேல் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in