திருடன் என நினைத்து கட்டிடத்தொழிலாளி அடித்துக்கொலை: திருப்பூரில் பயங்கரம்

கொலை
கொலை

அதிகாலையில் சிறுநீர் கழிக்கச் சென்ற கட்டிடத் தொழிலாளியை திருடன் என தவறுதலாக நினைத்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், கோம்பக்காட்டுப்புதூர் பகுதியில் வீடு எடுத்து சிலர் கட்டிடத் தொழில் செய்து வந்தனர். அந்தப் பகுதியில் நடக்கும் கட்டுமானப் பணி வேலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து செல்வம்(35) என்ற வாலிபரும் தங்கி இருந்தார்.

இன்று அதிகாலையில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து சிறுநீர் கழிப்பதற்காக முத்து செல்வம் வெளியே சென்றார். அப்போது அவரைத் திருடன் என நினைத்த சிலர் சரமாரியாகத் தாக்கினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த முத்துசெல்வம் இதுகுறித்துத் தன் நண்பர்களிடம் அலைபேசியில் அழைத்துச் சொல்லியுள்ளார்.

சோமனூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் முத்துசெல்வம் ஏற்கெனவே உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், “அருகில் இருந்த விசைத்தறி கூடம் ஒன்றில் சிறுநீர் கழிக்கச் சென்று இருந்தார் முத்துசெல்வம். அப்போது அவரைத் திருடன் என நினைத்து உரிமையாளர் கொடூரமாகத் தாக்கியது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கட்டிடத் தொழிலாளியை திருடன் என அடித்துக் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in