விடாது துரத்திய ஒருதலைக் காதல்: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது

விடாது துரத்திய ஒருதலைக் காதல்: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது

இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்த வாலிபர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் டவுண் பகுதியில் டைப்பிங் சென்டர் ஒன்றில் வேலைசெய்து வந்தார். இவர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப்புகாரில், என் தங்கைக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவர் தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லைக் கொடுத்து வருவதாகவும், அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் பேட்டை போலீஸார் இதை திருநெல்வேலி சைபர் க்ரைம் போலீஸாருக்கு அனுப்பிவைத்தனர். சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்தது பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஞானசுப்பிரமணியன்(28) எனத் தெரியவந்தது.

ஞானசுப்பிரமணியன் கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரிமேனாக வேலை செய்கிறார். புகார் தாரரின் தங்கை டவுணில் மருந்தகம், ஒன்றில் முன்பு வேலை செய்தார். அப்போது 4 ஆண்டுகளாகவே அவரைக் காதலிப்பதாக ஞான சுப்பிரமணியன் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனாலேயே அந்தப் பெண் வேலையைவிட்டு நின்றுள்ளார். இந்நிலையில் ஞானசுப்பிரமணியன் இன்ஸ்டாகிராம் ஐடி மூலமும் காதல் தொல்லை கொடுத்துள்ளார். சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் அது ஞானசுப்பிரமணியனின் இன்ஸ்டாகிராம் ஐடி என தெரியவந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in