மின்னல் வேகத்தில் பாய்ந்த பைக்; துண்டான வாலிபரின் தலை: நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய போது சோகம்

மின்னல் வேகத்தில் பாய்ந்த பைக்; துண்டான வாலிபரின் தலை: நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய போது சோகம்

பெங்களூருவில் நேர்முகத் தேர்வுக்கு சென்றுவிட்டு தன் பைக்கிலேயே கன்னியாகுமரி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வாலிபர் அதிவேகமாக வந்ததால் தடுப்புக் கம்பியில் மோதி தலை துண்டாகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்(25). பட்டதாரியான இவர் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர விண்ணப்பித்து இருந்தார். அவரை நேர்முகத்தேர்வுக்கு அந்த நிறுவனத்தில் அழைத்து இருந்தனர். இதற்காக அஜித், குமரி மாவட்டத்தில் இருந்து தன் டூவீலரிலேயே பெங்களூரு சென்றார். அங்கு நேர்முகத் தேர்வை முடித்துக்கொண்டு பைக்கிலேயே கன்னியாகுமரி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

கோவில்பட்டி அருகில் உள்ள இனாம் மணியாச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் தடுப்பு கம்பிகளின் மீது அஜித்தின் பைக் மோதியது. இதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே அஜித் பரிதாபமாக உயிர் இழந்தார். கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அஜித் அதிவேகமாக பைக்கை ஓட்டிவந்ததே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது.

நேர்முகத் தேர்வுக்கு சென்ற வாலிபர் வழியிலேயே விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in